வியாழன், 27 நவம்பர், 2014

SSA மாநில திட்ட இயக்குநர் வாழ்த்து

SSA மாநில திட்ட இயக்குநர் அவர்களுடன் DFC 2014 ல் வெற்றி பெற்ற தமிழ்நாட்டினைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நம் பள்ளி மாணவனும் ஆசிரியரும்.

ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் வாழ்த்து

DFC 2014 போட்டியில் இந்தியாவின் Top 100 ல் ஒன்றாக தேர்வு பெற்று I Can விருது பெறும் மாணிக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை வாழ்த்தும் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர்  திரு கண்ணப்பன் அவர்கள்.

தொடக்கக் கல்வி இயக்குநர் வாழ்த்து

DFC 2014 போட்டியில் இந்தியாவின் Top 100 ல் ஒன்றாக தேர்வு பெற்று I Can விருது பெறும் மாணிக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை வாழ்த்தும் தொடக்கக் கல்வி இயக்குநர் திரு ஆர்.இளங்கோவன்  அவர்கள்.

DFC 2014_ இந்தியாவின் Top 100 ல் நம் பள்ளி!

அனைவருக்கும் கல்வி இயக்கம்.  DFC INDIA உடன் சேர்ந்து நடத்திய Design for Change- School Challenge 2014 க்கான போட்டியில் மாணிக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இந்தியாவின் Top-100 பள்ளிகளுள் ஒன்றாக தேர்வு பெற்றுள்ளது.
இதற்கான விருது அளிக்கும் நிகழ்வு அகமதாபாத்தில் நவம்பர் 22, 2014 அன்று நடைபெற்றது. வழிகாட்டி ஆசிரியர் திரு. த. பெருமாள்ராஜ் மற்றும் DFC குழுவின் ஐந்து மாணவர்களில் ஒருவரான எட்டாம் வகுப்பு உ. அபிமன்யு ஆகியோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

நம் பள்ளி மாணவர்கள் தாங்களாக விதைகளை சேகரித்து, சிறிய அளவில் நர்சரி அமைத்து, மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். மரக்கன்றுகள் வேண்டுவோர் பள்ளியினைத் தொடர்பு கொள்ளவும்.